தடி மர லோடுகள் அனுமதிக்கப்பட்ட எடைக்குமேல் ஏற்றக்கூடாது – தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கம் தீர்மானம்

0
43
lorry news

தூத்துக்குடி,ஜூன்21:

தடி மர லோடுகள் அனுமதிக்கப்பட்ட எடைக்குமேல் ஏற்றக்கூடாது என்று தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கீதா ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் ஜெகன்பெரியசாமி தலைமை வகித்தார்.

தூத்துக்குடி டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் மதியழகன், தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஏஜென்சி தலைவர் சுப்புராஜ், செயலாளர் ஆறுமுகச்சாமி, உதவித் தலைவர் பாஸ்கர், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தடி மர பாடி வண்டிகள் லோடு ஏற்றும்போது லாரியின் பின்பகுதி கதவு திறந்திருக்க கூடாது. தடி மர லோடுகள் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் ஏற்றக்கூடாது. லாரி வாடகையானது ஏற்கனவே முடிவு செய்திருக்கும் கட்டணத்திற்க்கு குறைவாக வாங்க கூடாது.

வெளிமாநிலங்களுக்கு செல்வதுபோல வண்டிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி லோடு ஏற்றவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here