முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற இணையதளம் வசதி

0
25
mildarry

தூத்துக்குடி,ஜூலை.02:

முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

மத்திய முப்படைவீரர் வாரியம் புது தில்லி வாயிலாக முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் ஏனைய நிதியுதவிகள் அனைத்தும் பெற, முன்னாள் படைவீரர்கள், விதவையர்கள் தங்களது பெயரினை இணைய தளத்தில் பதிவு செய்த பின்னர் தங்களது தகுதிக்கு ஏற்றார் போல நிதியுதவி பெற்றிட‘ நலதிட்டங்கள்’ என்ற தலைப்பில் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் பட்டப் படிப்பு பயின்று வரும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க அக்டோபர் 31ம் தேதி கடைசி நாளாகும். பட்டப் படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நவம்பர் 30 ம்தேதி கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here