கிராமப்புற இந்தியாவை மேம்படுத்த வேதாந்தா குழுமம் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு – பல்வேறு திட்டங்கள் அறிமுகம்

0
439
sterlite news

புதுடெல்லி ஜூலை02:

கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்பிலான முழுமையான திட்டத்தை அறிவித்து வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் கூறியதாவது, “நமது சமூகங்களுக்கு இந்த இடர்காலத்தில் பாதுகாப்பு வழங்குவதும், காலத்தின் தேவையாகும். அதனால், அனைவரையும் உள்ளடக்கிய நிரந்தரமான வளர்ச்சியை கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதில், ‘ஸ்வஸ்த் கோவன் அபியான்’ என்பது 1000 கிராமங்களில், முழுமையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான முதல் முயற்சி ஆகும். 7 கோடி குழந்தைகளுக்கும் 2 கோடி பெண்களுக்கும் உதவிடும் வேதாந்தாவின் முக்கிய திட்டமான ‘நந்தகர்’ திட்டத்துக்கு அணிசேர்க்கும் திட்டம் இது.

தேவையான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதன்மூலம், சமூகத்தின் மீட்சிக்கு உதவவும், உறுதி செய்யவும் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.” ‘ஸ்வஸ்த் கோவன் அபியான்’ திட்டத்தின் மூலம், அனில் அகர்வால் அறக்கட்டளை, 12 மாநிலங்களைச் சேர்ந்த 24 மாவட்டங்களில் உள்ள 1,000 கிராமங்களின் சுகாதார வசதிகளை வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், 20 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் மூலம், மாவட்ட அளவில் தேவைப்படும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், தொலைமருத்துவ சேவைகள், மருத்துவ மற்றும் பரிசோதனைக் கூட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் / அவசர ஊர்திகள் ஆகியவை வழங்கப்படும். மேலும் இந்த வசதிகள் எல்லாம், பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆங்காங்கே செய்து தரப்படும். இதன்மூலம், இந்த வசதிகள் உடனடி பயன்பாட்டுக்கு வரும்.

‘ஸ்வஸ்த் கோவன் அபியான்’ திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகலின் வாயிலாக, பல்வேறு மாநில / மாவட்ட நிர்வாகங்கலோடு சேர்ந்து கொரோனா பாதிப்பு தடுக்கப்படும். இதன்மூலம், பல்வேறு சமுதாயங்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதோடு, சுகாதாரத் துறை முதலீடாகவும் அது அமையும். தொலைத்தூரப் பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ மற்றும் ஆரோக்கிய முகாம்களை அமைத்து, தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தரமான சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் மருத்துவ வசதிகளை மேம்படுத்தித் தரவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

வனவிலங்குகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் மேற்கூரைகளையும் உதவிகளையும் செய்யவும் அனில் அகர்வால் அறக்கட்டளை புதிதாக திட்டமிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ம் மேம்பாட்டுக்காக செயல்படும் எங்களது முதன்மைத் திட்டமான நந்தகர் திட்டம் மேலும் வலிமைப்படுத்தபடும். அதன் மூலம் நாடெங்கும் உள்ள 7 கோடி குழந்தைகளும் 2 கோடி பெண்களும் பயன்பெறுவர்.

தெளிவான திட்டமிடல் மற்றும் 5,000 கோடி ரூபாய் முதலீட்டோடு அனில் அகவர்வால் அறக்கட்டளை, வேதாந்தாவோடு இணைந்து, பல்வேறு நற்பணிகளில் ஈடுபடுவதோடு, வலிமையான இந்தியா என்னும் கனவை நனவாக்க முயற்சி செய்யும்.

வேதாந்தா நிறுவனம் என்பது, வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் ஆகும். இது எண்ணெய், எரிவாயு மற்ற்உம் உலோக உற்பத்தியில் உலகின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்று. மேலும், இந்தநிறுவனம், இந்தியா,தென் ஆப்பிரிக்கா,நமீபியா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு,துத்தநாகம்,ஈயம்,வெள்ளி,தாமிரம்,இரும்புத் தாது,ஸ்டீல்,அலுமினியம்,னின் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சிக்காக வேதாந்தா நிறுவனம் பணியாற்றி வருகிறது. வேதாந்தாவின் அடிப்படை பண்புகளில் நிர்வாகத்திறனும் நிலையான வளர்ச்சியும்தான் முக்கியமானவை.

மேலும் அது ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தி வருகிறது. சமூகங்களுக்கு நன்மை செய்வது என்பது வேதாந்தாவின் மரபணுவிலேயே கலந்திருப்பது, அதன் மூலம் பல்வேறு உள்ளூர் சமூகங்கள் மேம்பாடு அடைய கவனம் செலுத்தி வருகிறது. வேதாந்தா கேர்ஸ் என்ற முயற்சியின் மூலம், நந்தகர்ஸ் என்ற திட்டம் செயல்படுத்தபடுகிறது. இதன் மூலம் உள்ளூர் அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு களையப்படுவதோடு,கல்வியும் ஆரோக்கியமும் வழங்கப்படுகிறது. பெண்கள்ய்க்கு சுய தொழில் கற்பிக்கப்பட்டு உயர்த்தப்படுகின்றனர்.

இந்த நிறுவனம், உலோகங்கள் மற்றும் சுரங்கத்துறையில் பெற்றுள்ள நிறனுக்காக, டவ்ஜோன்ஸ் சஸ்டெயினபிளிட்டி இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ளதோடு,சிஐஐ-ஐடிசி சஸ்டெயினபிளிட்டி விருது. ஃபிக்கி சிஎஸ் ஆர் விருது, டன் & பிராட்ஸ்டிரீர் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளது. பணியாற்றுவதற்கு மிகச் சிறந்த நிறுவனம் எனவும் சான்றிதழ் பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில், வேதாந்தா லிமிடெட் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, நியூயார்க் பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் ஏடிஆர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வேதாந்தா நிறுவனத்தின் சமுதாய மற்றும் பொதுநல திட்டங்களுக்கான தலைமை அமைப்பாக அனில் அகவர்வால் அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை ஆரோக்கியம், பெண்கள் மற்றும் குழந்தைகல் மேம்பாடு, விலங்கு நலத்திட்டங்கள், விளையாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது. அனில் அகர்வால் அறக்கட்டளை சமுதாயங்களுக்கு வலிமை சேர்ப்பதன் மூலம், வாழ்க்கையையே மாற்ற முயற்சி செய்கிறது. மேலும், நிலையான,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் தேசநலனுக்கு உறுதுணையாகவும் உள்ளது.

அனில் அகர்வால் அறக்கட்டளை,பில் & மெலிண்டா அறக்கட்டளையோடு இணைந்து, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு எண் 2, அதாவது,2030க்குள் அனைத்துவிதமான பசி,பட்டினி,ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களைவதற்கு உழைத்து வருகிறது. அனில் அகர்வால் அறக்கட்டளையின் முதன்மைத் திட்டமான நந்திகர் திட்டத்தின் மூலம், 7 கோடி குழந்தைகள் மற்றும் 2 கோடி பெண்களின் முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் முழுமையான வளர்ச்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here