வதோதரா: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் 91 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடம் செய்து அசத்தி வருகிறார்.
இது குறித்து கூறப்படுவதாவது: குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் அதர்வா அமித்முலே இவரது வயது 18. இவர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து உள்ளிட்ட 91 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடம் செய்து அசத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், வசுதைவ குட்டம்பகம் எனப்பொருள்படும் வகையிலான உலகம் ஒரு குடும்பம் என கருதுகிறேன் இதன் காரணமாக மற்ற நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற நினைத்தேன். தற்போது வரையில் 91 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடம் செய்துள்ளேன்.
மேலும் கத்தார் ,சிரியா ,தாய்லாந்து, ஏமன் , நியூசிலாந்து உள்ளிட்ட 69 நாடுகளின் தேசிய கீதத்தை மனப்பாடம் செய்ததை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி பாராட்டுசான்றிதழ் வழங்கி உள்ளது.
எனது தாத்தா, பாட்டி, தாய் மற்றும் தாய்மாமன் உள்ளிட்ட குடும்பத்தினர்கள் கிளாசிக்கல் இசையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வீணை வாசிக்கவும் தெரியும். தற்போது கர்நாடக இசையை கற்றுவருகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.