தூத்துக்குடி, ஜூலை.7:
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 9பேர் என்.எம்.எம்.எஸ் எனப்படும் தேசிய திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், இதற்கு காரணமான ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரை பள்ளி தாளாளர் அகஸ்டின் பாராட்டி வாழ்த்தினார்.
இதுபோன்று, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவி அபிராமி தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி அபிராமியை பள்ளி தலைமையாசிரியர் கணேசன், பெற்றோர்&ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பாராட்டினர்.