திருச்செந்தூர்,தூத்துக்குடி அரசு மருத்துவ மனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்! – சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார்!

0
65
nalumavadi

திருச்செந்தூர்,ஜுலை.10:

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய புது வாழ்வுச் சங்கம் சார்பில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நல்ல சமாரியன் கிளப், புதுவாழ்வுச் சங்கம் மூலம் சமூக சேவைகள் செயல்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்த ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்டஉதவிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.கடந்த மே மாதம் 17-ஆம்தேதி கனிமொழி கருணாநிதி எம்.பி.,சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் ரூ.10லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன்செறிவூட்டிகள்,மருந்துப் பொருட்கள்,கிருமி நாசினிகள்,முகக்கவசங்கள்,கையுறைகள்,கவச உடைகள் ஆகிய வற்றை தூத்துக்குடி அரசுமருத்துவமனைக்கு சகோ.மோகன் சி.லாசரஸ்வழங்கினார்.

18-ஆம் தேதி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிரு‘;ணனி டம் சகோ.மோகன்.சி.லாசரஸ் வழங்கினார்.அதோடுமட்டுமல்லாமல் திருநங்கையர்கள், நரிக்குறவர்கள் குடும்பங்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை,எளிய மக்கள், தர்மம் எடுத்து பிழைப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் செய்தி யாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு 10 லட்சம் மதிப்பிலான கிருமி நாசினி கள், கையுறைகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

இரண்டாவது கட்டமாக 09.07.2021 காலை 11 மணியளவில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியநிறுவனர் சகோ மோகன் சி.லாசரஸ் தலைமையில் அறங்காவலர் டாக்டர் அன்புராஜ்,இயேசு விடு விக்கிறார் உடன் ஊழியர் சாம் ஜெபராஜ்,இயேசு விடுவிக்கிறார் ஊழிய மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் ஜெங்கின்ஸ், துறைத்தலைவர்கள் முன்னிலையில் ரூ 5 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை திருச்செந்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பொன் ரவி, பாபநாசம் குமார், மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பாளர், செவிலியர்கள் ஆகியோர் இடம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஹெயின்ஸ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

அதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ்; ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இடம் வழங்கினார். மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் மரு.நேருவிடம் வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ்; ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இடம் வழங்கினார். மருத்துவ உபகரணங்களை பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் மரு.நேருவிடம் வழங்கினார். மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங் கள் இ.சி.ஜி கருவி 2, மெட்டனல் மானிட்டர் 1, எக்ஸ்ரே மிசின் 1, எலைட் வியு பேசன்ட் மானிட்டர் 2, ஸ்டெச்சர் 4, வீல் சேர் 5 மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 650 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து ஒன்னரை கோடி ரூபாய் கொரோனா  நிவாரண நிதி  வழங்கியும் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ மருந்து பொருட்கள்  மற்றும் மருத்துவ உபகரணங்கள் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப் பிலான மருத்துவ உபகரண பொருட்களும் சகோ.மோகன் சி.லாசரஸ்  வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.    

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை படிபடியாக குறைந்து தற்போது தொற்றின் அளவு 20, 30 என குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் தொற்றின் அளவை விரைவில் குறைக்க முடிந்தது.இன்னும் முழு மையாக நாம் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதால் அனைவரும் பாதுகாப்பு டன் இருக்க வேண்டும். பல்வேறு நாடுகளில்  நியு+ட்டன் வகை வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது.இதுபோன்ற சமயங்களில்தான் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 2-வது அலையின்போது மக்கள் பங்களிப்பு மட்டுமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,தொழில்நிறுவனங்கள் மூலம் அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அமைப்பின் மூலம் சகோ.மோகன் சி.லாசரஸ் ரூ.16 லட்சம் மதிப்பில் பல்வேறு உப கரணங்களை வழங்கி உள்ளார்.இன்றைய தினம் ரூ.10 லட்சம் மதிப்பிலான உபகர ணங்களை வழங்கி உள்ளார்.இதுபோன்று திருச்செந்தூர் அரசு பொது மருத்துவம னைக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான கருவிகளை வழங்கி உள்ளார். இது மருத்துவ சிகிச்சைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். தூத்துக்குடியில் உள்ள மைக்ரோ பயலஜி ஆர்டிபிசிஆர் லேப் மூலம் 5 லட்சத்து 40 ஆயிரம் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா அதிகபரவலின்போது தினசரி 4ஆயிரம் டெஸ்ட்கள் வரை பரிசோதனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட் டத்தில் கொரோனா பரிசோதனைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை மூலமே மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவ வேண்டும். பொது வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அனைவரும் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து தடுப்பூசி வரவர தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. முதல் தவணை ஊசி போட்டவர்களுக்கு 2வது தவணை ஊசி அவர்கள் ஏற்கனவே போட்ட பகுதிக்கு சென்று போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் மரு. குமரன், உறைவிட மருத்துவர் சைலேஸ் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் மரு.அஅன்புராஜ், இயேசு விடுவிக்கிறார் ஊழிய சமூக அமைப் பான  குட் சமாரியன் கிளப் பொருளாளர் தாமஸ், செயலாளர் தாமஸ் ஜெயபால், தூத்துக்குடி தலைவர் பிரேம் சிங், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஹெயின்ஸ் மற்றும் ஊழியர்கள்  செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here