தூத்துக்குடியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் தவறவிட்ட ரூ.10ஆயிரம் மீட்க்கப்பட்டு முதியவரிடம் ஒப்படைப்பு

0
13
sp news

தூத்துக்குடி, ஜூலை.17:

தூத்துக்குடியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் தவறவிட்ட ரூ.10ஆயிரம் மீட்க்கப்பட்டு முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்சுகனி. இவர் கடந்த மே மாதம் ஸ்பிக் நகரிலுள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவர் குறிப்பிட்ட ஏ.டி.எம் இயந்திரத்தில் பணபரிவர்த்தனை முடிந்து ரூ.10ஆயிரம் வருவதற்கு முன்பாக அங்கிருந்த அடுத்த இயந்திரத்தில் சென்று ரூ-.10ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார்.

இந்நிலையில், அவரது செல்போன் எண்ணிற்கு இரண்டுமுறை ரூ.10ஆயிரம் பணம் எடுத்ததாக குறுச்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, சம்சுக்கனி பணம் வரவில்லை என்று ஏ.டி.எம் இயந்திரத்திலேயே விட்டுச் சென்ற ரூ.10ஆயிரத்தை அவருக்கு அடுத்துவந்த நபர் எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமிருந்து பணம் மீட்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, எஸ்.பி., ஜெயக்குமார் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை தவறவிட்ட சம்சுகனியிடம் ரூ.10ஆயிரத்தை ஒப்படைத்தார்.

அப்போது எஸ்.பி., ஜெயக்குமார் கூறியதாவது, பொதுமக்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது பணப்பரிவர்த்தனை முழுமையடைந்துவிட்டதா? என சரிபார்த்த பின்னரே அங்கிருந்து செல்லவேண்டும்.

இதுபோன்று பணம் எடுக்கச் செல்லும்போது யாராவது ஏ.டி.எம். இயந்திரத்தில் வந்திருந்த பணத்தை எடுக்காமல் விட்டு சென்றிருந்தால் அந்த பணத்தை எடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும். அடுத்தவர் பணத்தை எடுத்துச்சென்றால் அதை கண்டுபிடிப்பதற்கு சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் பல வழிமுறைகள் உள்ளது, இதில் இருந்து யாராலும் தப்ப முடியாது.

எனவே, ஏ.டி.எம் இயந்திரத்தில் பண பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here