”முதல் தவணை 40 %, மொத்த கட்டணமும் 75 % மட்டுமே கல்வி கட்டணம்” – தமிழக பள்ளி கல்வித்துறை

0
6
news

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக பல்வேறு பணிகள் முடங்கியிருக்கும் நிலையில் ஆன் லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டியது இல்லை. 75 % மட்டும் செலுத்தினால் போதும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோரை கட்டாயப்படுத்துவதாக பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை ஆனையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள மனுவில், ‘’ தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் 24 தேதி முதல் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2021-22ம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்றும் தொடங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என புகார்கள் வருகின்றன.

தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் துவங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்யலாம். மீதமுள்ள 25 சதவீதம் கட்டணங்களை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை பொருத்து அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here