புதுக்கோட்டை மழைநீர் குட்டை ஆக்கிரமிப்பு – மீட்க வேண்டுமென பாஜக கோரிக்கை

0
18

தூத்துக்குடி வடக்குமாவட்ட தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: புதுக்கோட்டை சத்திரம் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள பழைய பாலம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான மழைநீர் குட்டை காலகாலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மழைக்காலங்களில் இந்த குட்டையில் சேரும் மழைநீரானது இப்பகுதியிலுள்ள கால்நடை மேய்ச்சல்காரர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதோடு, இந்த குட்டையில் சேரும் மழை நீரால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மழைநீர் குட்டை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால் மழைநீரை தேக்கி வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதோடு, மழைக்காலங்களில் குட்டையில் போதுமான அளவிற்கு மழைநீர் தேங்குவதற்கு வழியின்றி அருகிலுள்ள அய்யனார் காலனி, ராஜீவ் நகர் பகுதி மக்கள் மழைவெள்ள நீரால் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, இந்த மழைநீர் குட்டையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதுடன், நிலத்தடி நீரை பாதுகாத்திடும் பொருட்டு இந்த மழைநீர் குட்டைக்கு அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here