கூட்டாம்புளியில் மக்களுக்கு நிவாரணதொகுப்பு – மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார்

0
20
kootampuli

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி நாராயணசுவாமி கோவிலில் கொரோனா காலத்தை முன்னிட்டு 70 ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு டர்னிங் பாயின்ட் அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகைபொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கொரோன நிவாரண தொகுப்புகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா பெருந்தொற்று 3ம் கட்ட பரவலை தடுத்திட 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திடவேண்டும், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.

மருத்துவத்துறையினரின் அறிவுரைப்படி இவை அனைத்தையும் நாம் கடைபிடித்தாலே போதும் நம்மை நாமே காப்பாற்றி கொள்ள முடியும். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை அனைவரும் முழுமையாக கடைபிடித்திடவேண்டும் என்றார்.

இதில், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டர்னிங்பாயின்ட் அறக்கட்டளை மேலாளர் மொரார்ஜி தேசாய் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here