குடிநீர், சாலை வசதி இல்லாத லிங்கம்பட்டி கலைஞர் நகர் – பெண்கள் கோரிக்கை

0
13
kovilpattai

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி பஞ்சாயத்தில் 6வது வார்டு பகுதியாக கலைஞர் நகர் உள்ளது. இங்குள்ள மக்கள் தீப்பெட்டி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி உருவாகி ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை இங்குள்ள மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு என எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை.

இதனால், பலமுறை வட்டார அளவிலான அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லாத நிலையில், கலைஞர் நகரை சேர்ந்த முருகேஸ்வரி தலைமையில் நந்தினி, மகாலெட்சுமி, சுப்புலெட்சுமி, செண்பகவல்லி, முத்து உள்ளிட்ட பெண்கள் இன்று கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:

எங்களது குடியிருப்பு பகுதியான லிங்கம்பட்டி பஞ்சாயத்து 6வது வார்டுக்குரிய கலைஞர் நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தில் வழங்கப்பட்ட இடத்தில் நாங்கள் வீடு கட்டி பல வருட காலமாக குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சாலை, தெருவிளக்கு வசதி இதுவரை செய்து தரப்படவில்லை.

குடிப்பதற்கு குடிநீர் வசதி கூட இல்லாதநிலையில் நாங்கள் குடிதண்ணீரை ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு உள்ளாகி பலவருட காலமாக அவதிப்பட்டு வருகிறோம்.

இதுதொடர்பாக நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியரான தாங்கள் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை உடனடியாக செய்து கொடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here