தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் – டி எஸ் எப்.அணியினர் வேட்புமனு தாக்கல்

0
16
news

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 20, 21 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடக்க உள்ளது.

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். அணி சார்பில் சாயர்புரம் சேகரத்தில் இருந்து திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் ஆலயமணி, ஜெயக்குமார் மற்றும் மனோ ராஜ் ஆகியோர் வேட்புமனுக்களை சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் குருவிடம் அளித்தனர்.

இதுகுறித்து டி. எஸ். எப் அணி லே செயலர் வேட்பாளர் கிப்ட்சன் கூறியதாவது, திருநெல்வேலி திருமண்டலத்தில் இருந்து தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் உருவாக காரணமாக இருந்தவர் முன்னாள் லே செயலர் டி எஸ் எப் துரை ராஜ். அந்த காலகட்டத்தில் திருமண்டலத்தில் இறைப்பணி, கல்விப் பணி, சமூகப் பணி மற்றும் மருத்துவ பணி ஆகியவை சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருமண்டலத்தின் வளர்ச்சி தேக்கம் அடைந்துள்ளது. இதற்கு தற்போதைய நிர்வாகமே காரணம். இந்நிலையில் மீண்டும் திருமண்டல தேர்தலில் டி எஸ் எஃப் அணியானது எஸ் டி ஆர் பொன் சீலன் மற்றும் முன்னாள் லே செயலர் மோகன் ஆகியோருடன் இணைந்து போட்டியிடுகிறது.

திரு மண்டலத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் வெளிப்படையான நிர்வாகத்தினை அளிக்கவும், சபைகள் ஊழியத்திற்கு ம் மற்றும் சமூகப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் வகையிலும் திருமண்டல கல்வி நிறுவனங்களின் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாற்றி அமைத்திடவும் மற்றும் எளிதில் நிர்வாகிகளை சபை மக்கள் அணுகும் வகையிலும் ஒட்டுமொத்த நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்திடவும் எங்கள் அணி உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.

மேலும் திருமண்டல சபை மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார். பேட்டியின்போது எஸ் டி ஆர் பொன் சீலன், முன்னாள் செயலர் மோகன், தூத்துக்குடி வட்ட கோயில் ஜான்சன், ஜெயக்குமார் ரூபன், நடுவக்குறிச்சி சாலமோன் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம், குமாரபுரம் ,புதுக்கோட்டை, சேர்வைகரன்மடம் ,தங்கம்மாள்புரம் ,செந்தியம்பலம், நடுவக்குறிச்சி மற்றும் சாயர்புரத்தை சேர்ந்த டி எஸ் எஃப் அணி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் போட்டியிடும் டி.எஸ்.எப். அணியினரின் ஆலோசனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு டி.எஸ்.எப். அணியின் லே செயலர் வேட்பாளர் கிப்ட்சன் துரைராஜ் தலைமை வகித்து பேசினார். முன்னாள் லே செயலர் மோகன், வட்டக் கோயில் ஜான்சன், ஜெயக்குமார் ரூபன், சாமுவேல் தேவ பிச்சை ஆரம்ப ஜெபம் செய்தார். பேராசிரியர் ஆலயமணி வரவேற்று பேசினார். கூட்டத்தில் திருமண்டல தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் சாமுவேல் நன்றி கூறினார். மனோ ராஜ் நிறைவு ஜெபம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here