அடி தடியும், ஆபாசமுமான தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் களம்

0
13
csi news

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் 20,21ம் தேதிகளில் வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியும், டி.எஸ்.எப்.அணியும் போட்டியிடுகின்றன. எஸ்.டி.கே.ராஜன் அணிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குரூப் ஆதரவு தெரிவிக்கின்றன. டி.எஸ்.எப் அணிக்கு எஸ்.டி.ஆர் குரூப் ஆதரவு தெரிவிக்கின்றன.

தேர்தல் தேதி அறிவித்தது முதல் தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஓட்டு போட வேண்டிய சபை மக்களில் பலரின் ஓட்டு பறிக்கப்பட்டிருப்பதாக குற்றசாட்டு சொல்லப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று இரவில் தங்கம்மாள்புரத்தில் இரு தரப்பிற்கு இடையே நடந்த அடி,தடி மோதலில் எஸ்.டி.ஆர் தரப்பை சேர்ந்த சிலர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எஸ்.டி.கே.ராஜன் அணியை ஆதரிக்கும் சி.த.செல்லப்பாண்டியன் மகன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரப்பி விடப்பட்டது. அது பரபரப்பை ஏற்படுத்தியது. அடி,தடியும் ஆபாசமும் திருமண்டல தேர்தல் களத்தில் அதன் தரத்தை குறைத்து வருவதாகவே தெரிகிறது.

அன்பை வலியுறுத்தும் ஆன்மிக ஸ்தாபனத்தில் இப்படி அடிதடியும், ஆபாஷ விரசமும் ஏற்க கூடியதாக இல்லை. நல்லது செய்யும் நல்லோர் யார் என்பதை சபை மக்களிடம் விளங்க செய்து அவர்களிடம் ஓட்டு வாங்கி பொறுப்புக்கு வருவதே நல்ல ஆன்மிக பொறுப்பாளர்களின் கடமையாக இருக்க முடியும். இதுவே நடுநிலையாளரின் கருத்தாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here