தூத்துக்குடி தொகுதியில் ஜூலை 22 முதல் 25வரை மக்கள் குறை கேட்பு முகாம் – அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

0
339
geethajeevan

தூத்துக்குடி,ஜூலை20:

தூத்துக்குடியில் நாளை 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி மூலம் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்திக்க இருக்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை :

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கீதாஜீவன், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காரணத்தால் தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் அவா்களின் குறைகளை அறியவும் முடியவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வருகிற இன்று (ஜூலை 22) முதல் 25 ஆம் தேதி வரை தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி மூலம் பொதுமக்களை நேரில் சந்திக்க இருக்கிறார்.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாலை 4.00 மணி பொட்டல்காடு, 4.30 மணி முள்ளகாடு, 5.00 மணி சுந்தர்நகா், 5.30 மணி கிருஷ்ணாநகா், பேரின்பநகா், 6.00 மணி பொன்னான்டிநகா், வைகோதெரு, 6.30 மணி ஏ.வி.எஸ் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

23 ம்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.00 மணி திருமாஜிநகா், 4.30 மணி அம்மன்கோவில்தெரு, 5.00 மணி சூசைநகா், 5.30 மணி தங்கம்மாள்புரம், 6.00 மணி சண்முகபுரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

24 ம்தேதி (சனிக்கிழமை) மாலை 4.00 மணி வீரநாயக்கன்தட்டு, 4.30 மணி முடுக்குகாடு, 5.00 மணி ஊரணி ஒத்தவீடு, 5.30 மணி காதர்மீரான்நகா், 6.00 மணி கோயில்பிள்ளைநகா், 6.30 மணி முத்துநகா் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

25 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணி மீனவா்காலனி, 4.30 மணி தெர்மல் கேம்ப்-2, 5.00 மணி லேபா்காலனி, 5.30 மணி ஹார்பா், 6.00 மணி தெர்மல் கேம்ப்-1 ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், அரசால் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து மனுவாக எழுதி அமைச்சர் கீதாஜீவனிடம் நேரில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here