தூத்துக்குடியில் பாஜக வின் ” இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் ” திட்ட பணிகள் தீவிரம்

0
12
bjp news

தூத்துக்குடி,ஜூலை21:

பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் ’இல்லம் சொல்வோம் உள்ளம் வெல்வோம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. அதன்படி பாஜகவை சார்ந்த ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அவர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள 25 வீடுகளுக்கு சென்று அந்த வீடுகளில் உள்ளவர்கள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்திருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு மத்திய அரசின் திட்டங்களில் எதெல்லாம் தேவை இருக்கின்றது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு அந்த திட்டங்களை கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

இதனால் பொது மக்கள் அரசு சார்ந்த பல நலத்திட்டங்களை சம்பந்தப்பட்ட பாஜகநிர்வாகிகள் மூலம் கிடைக்க பெற்று பயன் அடைவார்கள். இந்த திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் பாஜக தலைமையின் ஆணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மாநில நிர்வாகிகள் சென்று பாஜக நிர்வாகிளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

பாஜக மாநில செயலாளர் உமாரதி அத்தகைய பயிற்சி வகுப்பை தூத்துக்குடி பாஜக நிர்வாகிகளுக்கு அளித்தார்கள். அதில் மாவட்ட தலைவர் பால்ராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் , கோட்ட இணை பொறுப்பாளர் ராஜா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் கிழக்கு மண்டல தலைவர் சந்தணக்குமார் வழிகாட்டுதலின் படியும் கிழக்கு மண்டலம் 148வது பூத் ராஜபிள்ளை சந்து பகுதியில் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்வின் மூலம் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தார்கள்.

கிழக்கு மண்டல பொதுச்செயலாளர் கே.சௌந்தர்ராஜன், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் எம்.பி.விக்னேஷ் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here