தூத்துக்குடியில் நடிகர் சிவாஜிகணேசனின் 20வது ஆண்டு நினைவு தினம்

0
5
sivaji

தூத்துக்குடி,ஜூலை21:

தூத்துக்குடியில் நடிகர் சிவாஜிகணேசனின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியில் நடிகர் திலகம் செவாலியே, டாக்டர் சிவாஜிகணேசனின் 20வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி, தீயணைப்பு நிலையம் அருகே அலங்கரிக்கபட்டு இருந்த திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிவாஜி சமூக பேரவை மாவட்ட தலைவரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான அருள் தலைமை வகித்தார். சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் எட்வின் பானு, மாவட்ட பிரபு மன்ற தலைவர் குமார முருகேசன், மாநகர கலை பிரிவு தலைவர் ஆர்.செல்வராஜ், வடக்கு மாவட்ட கலை பிரிவு தலைவர் பெத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், பரதர் நலச்சங்க தலைவர் ரொனால்டு வில்லவராயர், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ், மதச்சார்பற்ற ஜனதா தள மாவட்ட தலைவர் ராஜேந்திரபூபதி, முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.சூசை வியாகுலம், முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மண்டல தலைவர்கள் பிரபாகரன், செந்தூர்பாண்டி, முன்னாள் நகர தலைவர் அழகுவேல், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி உள்பட ஏராளமான ரசிகர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இதுபோல், தூத்துக்குடி சிவந்தாகுளம் சந்திப்பில் ஜனதா தளம் மாவட்ட செயலாளர் கோமதி நாயகம், சிவாஜி ரசிகர் மன்ற செயலாளர் ஜான்சன், மாநகர தலைவர் சுடலை, மாநகர காங்கிரஸ் செயலாளர் சங்கரன் உட்பட பலர் சிவாஜியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here