தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தல் – வேட்பு மனுதாக்கல் நிறைவு

0
19
sdr news

தூத்துக்குடி,ஜூலை.22:

திருமண்டல தேர்தலில் தங்கம்மாள்புரம் சேகரத்திலிருந்து போட்டியிட எஸ்.டி.ஆர்.பொன்சீலன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது நடைபெறவுள்ள திருமண்டல தேர்தலில் டி.எஸ்.எப் அணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் லே செயலாளர் மோகன் கூறினார்.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி – நாசரேத் திருமணடலத்தின் 2021 – 2024 ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போது நிர்வாகத்தில் உள்ள எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணியும், டி.எஸ்.எப், எஸ்.டி.ஆர் மற்றும் மோகன் ஆகியோர் இணைந்த டி.எஸ்.எப் அணியும் போட்டியிடுகிறது. முதல் கட்ட தேர்தல் ஆகஸ்ட் 15ம் தேதியும், அக்டோபர் 20,21 ஆகிய தேதிகளில் இறுதி கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்தது.

தங்கம்மாள்புரம் சேகரத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 74 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அதில் 28 பேருக்கு மீண்டும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கம்மாள்புரம் சேகரத்தின் சார்பில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.டி.ஆர்.பொன்சீலன் சேகரத் தலைவர் பொறுப்பு வகிக்கும் தூத்துக்குடி சபை மன்ற தலைவர் செல்வின் சார்லஸிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில் முன்னாள் லே செயலாளர் மோகன், சாயர்புரம் ஆலயமணி, எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், அபிஷேக்பொன்சீலன் உள்ளிட்ட தங்கம்மாள்புரம் சபை மக்கள் கலந்து கொண்டனர். அப்போது மோகன் கூறியதாவது, தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல தேர்தலில் பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே இன்று எஸ்.டி.ஆர்.பொன்சீலன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். குறுக்கு வழியில் நிர்வாகத்தை கைப்பற்ற வேண்டும் என்று சிலர் செயல்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு தவறான செயல்களை செய்து வருகின்றனர். ஆனால் இவைகள் அனைத்தையும் கடந்து இறைவன் ஆசியோடு, திருமண்டல மக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் டி.எஸ்.எப் அணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

முன்னதாக தூத்துக்குடி மட்டக்கடை பரி.பேட்ரிக்ஸ் இணைபேராலயத்தின் சார்பில் திருமண்டல பெரு மன்ற உறுப்பினர் பதவிக்கு எம்.டி.இன்ஸ்டீன், கிருபாகரன், ஜான்வாசக், ஜான்சாலமோன்மனோகர், பாக்கியராணி, டேவிட் நோவா ஆகியோர் சேகர தலைவரும் குருத்துவ செயலாளருமான மோசஸ்ஜெபராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் லே செயலாளர் மோகன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேப்போன்று போல்பேட்டை சேகரத்தில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு சுதன்கீலர், மோகன்ராஜ் அருமைநாயகம், எஸ்தர் அன்பு, தினேஷ் ஆகியோர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் சேகரத்தலைவர் மைக்கேல்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜேஸ்பர்மார்ட்டின், ஐசக், அருள்பாலசிங்,ராபின்,கனகராஜ்ஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here