தூத்துக்குடியை சேர்ந்தவர் இந்திய -ஆப்ரிக்க வர்த்தக குழுவின் தலைவராக தேர்வு

0
12
news

தூத்துக்குடி, ஜூலை 22:

இந்திய-ஆப்ரிக்க வர்த்தக குழுவின் மேற்கு ஆப்ரிக்க தலைவராக தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜேம்ஸ் ஞானராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஞானராஜ் (49). இவர், மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டில் மரத்தடிகள் ஏற்றுமதி தொழில் செய்யும் கிங்டம் எக்ஸிம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்திய- ஆப்ரிக்க வர்த்தக குழுவின் மேற்கு ஆப்ரிக்க தலைவராக ஜேம்ஸ் ஞானராஜ் கடந்த 15 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு ஐஏடிசி அமைப்பின் இயக்குநர் ஜெரேமியா குவேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதுகுறித்து கிங்டம் எக்ஸிம் நிறுவனத்தின் தூத்துக்குடி பிரிவு இயக்குநர் கிருபா ரத்தினபாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர் ஒருவர் முதல் முறையாக இந்திய – ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சில் மேற்கு ஆப்பிரிக்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதும், அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதும் பெருமையாக உள்ளது. தூத்துக்குடி மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இடையே பல்வேறு வர்த்தக நிகழ்வுகள் அதிகரிக்க ஜேம்ஸ் ஞானராஜ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here