தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் 22.55 நிமிடம் உடலை வளைத்து யோகாவில் சாதனை

0
9
yoga

தூத்துக்குடி, ஜூலை 22:

தூத்துக்குடி மாணவர் ஒருவர் யோகாசனத்தில் சக்கராசனத்தை தொடர்ந்து 22.55 நிமிடம் செய்து புதிய சாதனை படைத்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் மகன் சஞ்சீவி (19). இவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். தூத்துக்குடியில் உள்ள சைன் யோகா பயிற்சி பள்ளியில் யோகா கற்று வரும் மாணவர் சஞ்சீவி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், சக்கராசனம் என்ற ஆனத்தை தொடர்ந்து 12.05 நிமிடம் செய்து சாதனை படைத்திருந்த மாணவர் சஞ்சீவி அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் புதிய சாதனையை இன்று மேற்கொண்டார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர் சஞ்சீவி உடலை வளைத்து செய்யக்கூடிய சக்கராசனத்தை தொடர்ந்து 22.55 நிமிடம் புதிய சாதனை படைத்து கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில், காரப்பேட்டை நாடார்_மகமை செயலர் பா. விநாயகமூர்த்தி, காமராஜ் கல்லூரி செயலர் சோமு, பொருளாளர் முத்துசெல்வம், கல்லூரி முதல்வர் து. நாகராஜன், காமராஜ் மெட்ரிக் பள்ளி செயலர் ஆனந்தராஜ், மதுரை தியாகராஜர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் செல்வக்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகி செந்தில் ஆறுமுகம், காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் ஆ. தேவராஜ், கண்காணிப்பாளர் சரவணன், யோகா பயிற்சி மைய நிர்வாகிகள் சுந்தரவேல், தனலட்சுமி, மாணவர் சஞ்சீவியின் பெற்றோர் சுரேஷ், பத்மா சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here