பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது 10 நாட்களில் தீர்வு – அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தகவல்

0
13
anitha

நாசரேத், ஜூலை 22:

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அழகப்பபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இதேபோல் அழகப்பபுரம், குரும்பூர், நாலுமாவடி, கச்சனாவிளை போன்ற பகுதிகளில் பொதுமக்கள் குறைகள் கேட்பு முகாம் நடந்தது.

இதில் பொதுமக்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், எனக்கு வாக்களித்தவர்களுக்கும், எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ததால்தான் நான் இன்று அமைச்சராக உள்ளேன். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. தேர்தலுக்கு முன் அவர் அளித்த வாக்குறுப்படி பொதுமக்களிடம் பெறும் கோரிக்கை மனுக்கள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதை இப்போது நிறைவேற்றி கொண்டிருக்கிறார். பல்வேறு உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்களாக கொடுத்துள்ளீர்கள். இந்த மனுக்கள் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில் பஞ்., தலைவர்கள் அழகப்பபுரம் பூமாரி, நாலுமாவடி பஞ்., தலைவர் இசக்கிமுத்து, கச்சனாவிளை பஞ்., தலைவர் கிங்ஸ்டன், நாலுமாவடி பஞ்., துணை தலைவர் ராஜேஷ், ஏரல் தாசில்தார் முருகேசன், ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், பிடிஓக்கள் தங்கவேல், கருப்பசாமி, விஏஓ தேசிகன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார், பொருளாளர் பாதாளமுத்து, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், குரும்பூர் நகர செயலாளர் பாலம் ராஜன், அழகப்ப புரம் பாலமுருகன், சோலை நட்டார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here