பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – சீனிவாச சித்தர் கோரிக்கை

0
52
samy news

இந்து மதம், இந்திய பிரதமர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களை மட்டுமல்லாமல் பாரத மாதாவையும் மிகமிக அவதூறாக பேசியுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதுடன், அவருக்கு மிகக்கடுமையான தண்டணை வழங்கிடவேண்டும் என்று ஸ்ரீசித்தர் பீட சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து, தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: நமது இந்திய திருநாட்டில் அனைத்து மத, இன, மொழி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் அன்புடன் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொருவடைய மத வழிபாடுகள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒற்றுமையாக நேசத்துடன் சகோதரர்களாக வாழ்ந்து வருவது நமது இந்திய திருநாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும்.

இப்படிப்பட்டசூழலில், நாகர்கோவில் அருமனை பகுதியில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் இந்து மதத்தையும், இந்துமத மக்களையும் மிகவும் அருவுறுக்கதக்க வகையில் அவதூறாக பேசியுள்ளார்.

அதோடு, நாம் அனைவரும் மதிக்க கூடிய இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.

அதோடு, இந்திய திருநாட்டு மக்கள் அனைவருக்கும் மதங்களை கடந்து புனிதமான தாய்க்கு நிகரான ‘பாரத மாதா’வை சொல்லக்கூடாத வார்த்தைகளால் மிகவும் தரம்கெட்ட வகையில் பேசியுள்ளது இந்திய திருநாட்டு மக்கள் அனைவரையும் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் கூடும் பொதுஇடத்தில் மதம், ஜாதி, அரசியல் ஆகியவற்றுக்கு எதிராகவும், இந்திய இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். சொந்த நாட்டிற்கே துரோகம் விளைவிக்கும் இதுபோன்ற கயவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்திடவேண்டும்.

இவரது அர்த்தமற்ற, அநாகரீகமான பேச்சு மதம், இனம் மட்டுமல்லாமல் தேவையில்லாமல் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்திடும் வகையில் இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்று இவர் யாரோ ஒருவரை குறை சொல்லவேண்டும் என்பதற்காக தமிழகத்தை ஆண்டுவரும் முதல்வர் தலைமையிலான அரசினையும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அவர் சார்ந்த அரசியல் கட்சியினையையும் தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளார்.

எல்லாம் அறிந்த தெரிந்த பாதிரியாரான அவர் நமது ‘பாரத மாதா’ குறித்து பேசியுள்ள பேச்சு மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. அதோடு கோவில் வழிபாடுகளை குறை சொல்லும் வகையில் பேசியுள்ள அவரது செயல் கண்டிக்கப்படவேண்டியதாகும்.

இதுபோன்ற செயல்கள் இனிவரும் நாட்களிலும் தொடருமானால் அது பொதுஅமைதிக்கு மிகுந்த குந்தகம் விளைவித்து விடும். அதோடு ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நமது மக்களிடத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தி தேவையில்லாத சண்டை, சச்சரவு, கலவரங்கள் கூட ஏற்பட காரணமாகி விடும். எனவே இதுபோன்ற தரம்கெட்ட செயல்களை மத்திய, மாநில அரசுகள் மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது மிகமிக அவசியமாகும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இப்படி கீழ்தரமாக பேசியுள்ள பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதுடன், அவருக்கு அதிகபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்கிடவேண்டும். தரம்கெட்ட இந்த பாதிரியாருக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கடுமையான தண்டனை இதுபோன்ற செயல்கள் இனி இந்திய திருநாட்டில் வேறுஎங்கும் நடைபெறாத வகையில் இருந்திட வழி வகுத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here