தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு

0
58
thoothukudi collector news

தூத்துக்குடி, ஜூலை.24:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மூலம் தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழுள்ள கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை, விளாத்திகுளம், காயல்பட்டணம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருந்தாளுநர் (9 பணியிடம்), ஆய்வக நுட்புநர் தரம்&2(9 பணியிடம்) மற்றும் நுண்கதிர் வீச்சாளர் (9 பணியிடம்) ஆகிய பணியிடங்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக தொகுப்பூதியத்தில் 6மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபட உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இப்பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.12ஆயிரம் வழங்கப்படும். இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு மட்டும் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்கள் வருங்காலங்களில் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது.

எனவே இப்பணிகளில் சேர விரும்புவோர் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் இணை இயக்குநர் நலப்பணிகள், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், 166,வடக்கு கடற்கரை சாலை, மீன்துறை வளாகம், தூத்துக்குடி&628 001 என்ற முகவரிக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here