திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடை முன்பு மதுபாட்டில் வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி குத்தி கொலை

0
68
ticer news

திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடை முன்பு மதுபாட்டில் வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பூந்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமன் மகன் லெட்சமணன்(48). கட்டிட தொழிலாளி. பொங்கல் பண்டிகை கொண்டாடட்டத்திற்காக திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் டாஸ்மாக் மதுபானக்கடையில் நேற்று பகல் 12 மணியளவில் லெட்சுமணன் மதுபாட்டில்கள் வாங்க நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபாட்டில்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. அப்போது அருகிலிருந்த ஓடக்கரை மெயின்ரோடு சன்னியாசி மகன் பாஸ்கரும் மதுபாட்டில் வாங்க போட்டி போட்டுள்ளார். இதனால் லெட்சுமணனுக்கும் பாஸ்கருக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது அங்கே கிடந்த உடைந்த பீர்பாட்டிலை எடுத்து லெட்சுமணன் கழுத்திலேயே பாஸ்கர் குத்தினார். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறி சம்பவ இடத்திலேயே லெட்சுமணன் இறந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன், திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பாரத், இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here