ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் – கிராம மக்கள் கோரிக்கை

0
48
sterlite news

தூத்துக்குடியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சுற்றுசூழல் குறைபாடுகளை காரணம் சொல்லி நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து ஆலை மூடப்பட்டது. மீண்டும் ஆலையை திறந்து பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆலையை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆலை நிர்வாகமும் சட்டபடியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே தூத்துக்குடி அருகே சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம், காயலூரணி என்ற டி.குமாரகிரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, மற்றும் சில்வர்புரம் கிராமத்தை சேர்ந்த சுப்புலட்சுமி, மல்லிகா உள்ளிட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், ’’கொரோனா நோயின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிர் இழக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் நோயாளிகளின் உயிரை பாதுகாத்திடும்பொருட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையானது நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் தொடர்ந்து சேவைமனப்பான்மையுடன் வழங்கி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் அடுத்து கொரோனா நோயின் மூன்றாவது அலை தாக்கம் வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி தடையின்றி நடைபெறவும், எங்கள் கிராமப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்கவேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டிருந்து.

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியில் முக்கிய இடத்தில் இருந்தது, மாநகர பகுதி மக்களின் பொருளாதாரம், மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியது உள்ளிட்ட ஆலையின் சேவையை குறிப்பிட்டு சொல்லி பொதுமக்கள் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here