டாஸ்மாக் வேலை கேட்டு மாற்றுத்திறனாளி போராட்டம்

0
37
news

விளாத்திகுளம் அருகேயுள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவர் சிவஞானபுரத்திலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி செய்வதற்கு கடந்த 5.10.2020ல் அரசு ஆணை வழங்கப்பட்டதாம்.

ஆனாலும் கடையின் மேற்பார்வையாளர், மாற்றுத்திறனாளியான நாகராஜனை பணி செய்ய அனுமதிக்கவில்லையாம். எனவே இது குறித்து கடந்த ஒரு வருடமாக அதிகாரிகளிடம் பணி ஒதுக்க கேட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நாகராஜன் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்ற போலீசார் நாகராஜன் மீது தண்ணீரை ஊற்றி பாதுகாத்து மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here