வர்த்தகரெட்டிபட்டி பஞ்சாயத்தில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை

0
45
varthagarettipatti

வர்த்தகரெட்டிபட்டி பஞ்சாயத்தில்15நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் முத்துலெட்சுமி, அகிலா தலைமையில் ஊர்பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்களது பஞ்சாயத்தில் கடந்த 15நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதோடு பஞ்சாயத்து பகுதியில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சரியாக இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here