தூத்துக்குடி கிராம மக்களுடன் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

0
89
sterlite

தூத்துக்குடியின் 20 முக்கிய கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மக்களுக்கு பரிசு கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டன.

தூத்துக்குடி, 16 ஜனவரி 2020: ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மங்களகரமான ‘தை’ தமிழ் மாதம் பிறந்ததையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து ஒரு பாரம்பரிய உணர்வுடன் தமிழ் அறுவடை திருவிழாவான பொங்கலை ஒரு வாரம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடியது. தூத்துக்குடியின் 20 முக்கிய கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு அன்பளிப்பு மற்றும் பரிசு கூப்பன்கள் வழங்கி பொங்கல் திருவிழாவை சிறப்பித்தது.

பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுகள் மற்றும் போட்டிகளில் கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மியூசிக்கல் சேர், ரங்கோலி போட்டிகள், நடனம், இசை முதலியவை அடங்கும். இந்த நிகழ்ச்சிகள், கிராம மக்களிடையே பொங்கல் திருவிழா குறித்த சமுதாய உணர்வுகளை ஏற்படுத்துவதற்கு நடத்தப்பட்டது.

இந்த கிராமங்களில் தெற்கு வீர பாண்டியபுரம், A. குமாரரெட்டிபாளையம், T. குமரகிரி, பண்டாரம்பட்டி, தெற்கு சனகரபேரி, வடக்கு சங்கரபேரி, மீளவிட்டான், சில்வர்புரம், மாடத்தூர், அய்யனடைப்பு, சோரிஸ்புரம், வடக்கு சிலுக்கண்பட்டி, தெற்கு சிலுக்கண்பட்டி, சுவாமிநாதம், நயினார்புரம், சில்லாநத்தம், புதூர்பாண்டியபுரம், கயிலாசபுரம், முத்துசாமிபுரம், ராஜாவின்கோவில் மற்றும் தூத்துக்குடி டவுன் ஆகியவை உள்ளடங்கும்.

இந்த விழாக்களில் 30,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here