எங்கும் எதிலும் எப்போதும் பெருகட்டும் நன்மைகள் – நடுநிலை.காம் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்..!

0
103
nadunilai.com news

ஒவ்வொரு சனத்தையும் அளந்து அர்த்தம் கண்டுபிடித்தவன் தமிழன். அப்படி கண்டுபிடித்ததை விழாவாக கொண்டாடுபவனும் தமிழனே. அப்படி கண்டுபிடித்து கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் ஆடிப்பெருக்கு நாளும் ஒன்று. ஆன்மிக நீதியாக வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் அதில் ஒரே அர்த்தம் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது.

மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாக நமது உடலில் இருக்கும் கொழுப்பை அகற்ற பல்வேறு விரதமுறைகள் கையாளப்படுகிறது. அதற்கு சம்ஹாரம் என சொல்லப்படுகிறது. சம்ஹாரம் என்பது அகத்தில் இருக்கும் திண்ணத்தை குறைப்பதாகும். விரதமிருந்து கொழுப்பை குறைத்த உடலில் மழைகாலங்களில் நோய் தொற்று ஏற்படுவதில்லை.

அதுபோல் வறட்சி காலங்களில் அதாவது வசந்த காலங்களில் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களை பெருக்கி கொள்ள வலியுறுத்தப்படுகிறது. அடுத்து வரும் மழைகாலங்களில் மழை நீரை பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வறட்சி காலங்களில்தான் நீரின் மகத்துவம் புரியும். அதுபோல் வறட்சி காலங்களில் நமது உடல் ஊட்ட சத்துக்களை எளிதில் ஏற்றுக் கொள்கிறது. எனவே உடலில் ஊட்ட சத்தினை பெருக்குவதற்கும், மழைநீரை தேக்கி வைக்க அதாவது பெருக்க நினைவு படுத்துவதுமே பெருக்கு நாளாகும். இது ஆடி மாதமாக இருப்பதால் ஆடி பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

இந்த நல்ல நாளில் அனைவருக்கும் நன்மைகள் பெருகட்டும் என வாழ்த்துகிறோம்..!

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here