மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பலன் தரும் கனிவகை மரங்கள் – மோகன் சி லாசரஸ் வழங்கினார்

0
76
nalumavadi

நாசரேத்,ஆக.04:

குரும்பூர் அருகே அங்கமங்கலத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பலன் தரும் கனிவகை மரங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அங்கமங்கலத்தில் மக ளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பு பான புதுவாழ்வுச் சங்கமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தினர். அங்க மங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் பானுப்பிரியா பாலன் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் சுரேஷ் இராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் ரஞ் சன் பால் மரம் எப்படி நடுவது என்பது குறித்தும், மரம் நடுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக பேசி னார். முன்னதாக எட்வின் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.பிரகாசபுரம் கிளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் சுரேஷ்குமார், தான் டக்கலை இயக்குனர் முகமது ஆசீப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முடிவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு பலன் தரும் கனிவகை மரங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை மூலம் 75 ஆயி ரம் மரக்கன்றுகள் நடுவது, ஏரல் வட்டத் தில் சீமைக்கருவேல மரங்களே இல் லாத நிலையை உருவாக்கிட நாலுமா வடி புதுவாழ்வுச் சங்கம் செயல்படும் என்று சகோதரர் பேசினார்.

முடிவில் ஹெயின் வெஸ்லி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here