ஆண்களுக்கு நிகராக பெண்களையும் பல்வேறு துறையிலும் மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க்கப்படுகிறது. அந்த வகையில் விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தென் தமிழகத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் கபடி போட்டியில் பெண்களும் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு சில அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வுச் சங்கம் அமைப்பின் மூலம், பெண்களுக்கான முதலாம் ஆண்டு கபடி பயிற்சி 10 நாள்கள் முகாம் தொடங்கப்பட்டது. அதனை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக சேர்மனும், நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனருமான மோகன் சி. லாசரஸ் துவக்கி வைத்து பேசினார்.
முன்னதாக எட்வின் சாம்ராஜ் ஆரம்பஜெபம் செய்தார்.தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரிவ்ஸ், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
பற்சியாளர்கள் அசோக்குமார், அன்புமணி, தங்கவேல், ஜானகிராம், தினே~;, சிவா ஆகியோர் பயிற்சிஅளிக்கின்றனர்.விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலாளர் செல்வக்குமார்,ஹெயின்ஸ் வெஸ்லி,மக்கள் தொடர்பு அலுவ லர் சாந்தகுமார், ஜேம்ஸ்,ஜோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.பயிற்சி முகாமில் சப்-ஜுனியர், ஜுனியர்,சீனியர் பிரிவுகளில் 110 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இவர்களுக்கு 3 வேளையும் சத்தான உணவு வகை களை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனம் வழங்குகின்றனர். முன்னதாக பயிற்சியில் பங்கு பெறுகின்ற மாணவிகளுக்கு பேக், வாட்டர் பாட்டில் ஆகியவற்றை நnலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை சகோதரர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன், எட்வின் சாம்ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.