காஷ்மீரில் மசூத் அசாரின் சகோதரர் ஊடுருவல்? மகன் சாவுக்கு பழித் தீர்க்க தற்கொலை படை தாக்குதல்

0
43
kasmir news

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அஸாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் உள்பட 15 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி என தகவல்கள் கூறுகின்றன. அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருப்பது பாதுகாப்பு படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

5 பேர் ஊடுருவல் இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அஸாரின் சகோதரர் இப்ராஹிம் அஸார் தலைமையில் தீவிரவாதிகள் 15 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் இதனால் மாதா யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதமே இப்ராஹிம் அஸாரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபர்நகரில் ஊடுருவியிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பழிவாங்க கடந்த 1999 -ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான 814 ரக விமானம் அருகே கடத்தப்பட்டது முழு காரணமே இப்ராஹிம். இவர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவி தன் மகன் உஸ்மான் ஹைதர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்ராஹிம் கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் ஊடுருவிய உஸ்மான் ஹைதரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். எனவே தனது மகனை போல் தானும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டு மரணமடைய வேண்டும் என இப்ராஹிம் கருதியுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here