சென்னை: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்தளித்தார்.
கவர்னர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, சபாநாயகர் அப்பாவு, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்அழகிரி, பாமக தலைவர் ஜிகேமணி, பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் எம்எல்ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.