நாசரேத்,ஜன.22:நாசரேத் பிரதர்ட்டன் தெருவில் எலும்புக்கூடாக காட்சி தரும் மனித உயிர்களை பலி வாங்க துடிக்கும் மின்கம்பத்தை அதிகாரிகள் பார்வையிட்டு புதிய மின்கம்பம் மாற்ற ஆவண செய்யவேண்டும் என இத்தெருமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
நாசரேத் பிரதர்ட்டன் தெருவில் வீடுகளுக்கு செல்லும் கேட் மத்தியில் அமைந்துள்ள மின்கம்பம் பழுதடைந்து எலும்புக்கூடாக காட்சிதருகிறது.இதுகுறித்து மின்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை இத்தெருமக்கள் எடுத்துக் கூறியும் எவ்வித பலனும் இல்லை.இதே நிலை நீடித்தால் பல மனித உயிர்களை இந்த மின்கம்பம் காவு வாங்கி விடும். எனவே இந்த மின்கம்பத்தை அதிகாரிகள் பார்வையிட்டு புதிய மின்கம்பம் மாற்ற ஆவண செய்யவேண்டும் என இத்தெருமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.