வாழ்நாள் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். நானும் ராணுவத்தில் பணியாற்றி உள்ளேன் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
நம் உயிரை காப்பாற்றுவது அரிசி, பருப்பு கிடையாது, இராணுவ வீரர்கள் தான், எல்லையில் தங்களது உயிரை பணயம் வைத்து நம்மை காப்பாற்றுகின்றனர். ஆகையால் வாழ்நாள் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் கட்டடித்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் கலந்து முன்னாள் இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினர். இதன் பின்னர் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’என்னுடைய மூத்த மற்றும் இளையசகோதரர்கள் இராணுவத்தில் பணிபுரிந்தனர். தானும் இராணுவத்தில் பணியாற்றியுள்ளதாகவும், நம் உயிரை காப்பாற்றுவது அரிசி, பருப்பு கிடையாது, இராணுவ வீரர்கள் தான், எல்லையில் தங்களது உயிரை பணயம் வைத்து நம்மை காப்பாற்றுகின்றனர்.
ஆகையால் தான் அவர்கள் அணிந்து இராணு உடுப்புக்கு மரியாதை தருகிறோம், எந்த கவலை இல்லமால் நாம் இங்கு உட்கார்ந்து இருக்கிறோம், ஆனால் இராணு வீரர்கள் சாப்பிட்டார்களா, தூங்கினார்களா என்று தெரியாது, ஆனால் இராணுவ வீரர்கள் இரவு பகலாக கண்விழித்து ஆயுதம் தாங்கி நம்மை பாதுகாத்து வருகிறார்கள்.அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கவேண்டும்’’ என்றார்.