தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 3 சேகரங்களில் தேர்தல் நிறுத்தம் – தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல் தேர்தல் விவகாரம்

0
108
csi news

தூத்துக்குடி – நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல தேர்தல் இன்று(16ம்தேதி) நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சாயர்புரம் அருகே தங்கம்மாள்புரம் சேகரத்தில் சபையினர் சிலர் சர்ச் போபுர மணிக் கூண்டின் மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுபதிவிற்கு முந்தையை நாள் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 14 பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அது குறித்து பிஷப்பும், ஐயர்வாலும் விளக்கம் சொல்ல இங்கே வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் 4 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாயர்புரம் போலீசில் புகார் செய்தனர்.

இந்தநிலையில் இன்று தங்கம்மாள்புரம்,ஜெபஞானபுரம்,மாயகூத்தபுரம் சேகரங்களில் தேர்தல் நிறுத்தப்படுவதாகவும் வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என்றும் திருமண்டல நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த மூன்று சேகரத்திலும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here