’’ஆளவிடுங்க சாமி.. அரசியலும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. – ஓட்டம்பிடித்த குமாரசாமி

0
26
kumarasamy

பெங்களூரு: இன்றைய அரசியல் பழிவாங்கும் குணம் உடையோருக்கும், சாதியை தூக்கிபிடிப்பவர்களுக்குமே பொருத்தமாக இருப்பதாக நினைப்பதாகவும், தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி தலையில் நடந்து வந்த காங்கிரஸ் – ம.ஜ.த கூட்டணி ஆட்சி கடந்த சில நாள்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.

காங்கிரிஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனால் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். இதனிடையே 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எடியூரப்பா எளிதாக பெரும்பான்மையை நிரூபித்தார்.

ஹெச்டி குமாரசாமி அறிவிப்பு இனிடையே ஹெச்டி குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து சில வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அரசியலை விட்டு விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

நல்லது தான் செய்தேன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் அரசியலுக்கு வந்தது, அத்தோடு இரண்டு முறை முதல்வரானது எல்லாமே விபத்துதான். நான் முதல்வராக இருந்த காலத்தில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் சிறப்பாக ஆட்சி செய்ததாக நம்புகிறேன். இனி நான் எல்லாவற்றிலும் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.

மக்கள் மனதில் பதவி என் குடும்பத்தில் உள்ள யார்கிட்டயும்ட சேர்ந்த யாரிடமும் நான் அரசியலிலிருந்து விலக உள்ளது குறித்த கேள்வியை கேட்காதீங்க. என்னை நிம்மதியாக இருக்கவிடுங்க. மக்களுக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினேன். எனக்கு இனி அதிகாரத்தில் இருக்கும் பதவி தேவையில்லை; மக்கள் மனதில் இருக்கும் பதவி கிடைச்சா போதும்.

கடவுள் பார்த்துக்குவார் மேலும் தற்போதைய அரசியல் போகும் வேகத்தில் என்னால் தாக்குபிடிக்க முடியவிலலை. என் தந்தை அரசியலில் இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் போல் எனக்கு வலிமைய இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இன்றைய அரசியல் பழிவாங்கும் குணம் உடையோருக்கும், சாதியை தூக்கிபிடிப்பவர்களுக்குமே பொருத்தமாக இருப்பதாக நினைக்கிறேன். நடப்பதை எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்” இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here