நாசரேத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான தேர்வு ! 85 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர்!!

0
34
nazareth

நாசரேத்,ஜன.25:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான தேர்வு நடந்தது.இதில் 85 மாணவ,மாணவிகள் பங்கு பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே தேசிய மாணவர் படை (என்.சி.சி) இயக்கம் செயல்படுகிறது. இதில் திருநெல்வேலி 9-வது தமிழ்நாடு சைகை அணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர்களுக்கான எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு நடந்தது. இதில் 85 மாணவ மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

இத்தேர்வுக்கு 9வது தமிழ்நாடு சைகை அணியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் பி.கே. அகுஜா தலைமை வகித்தார் சுபைதார் பாபு, ஹவில்தார் மேஜர் பெருமாள் மற்றும் ஹவில்தார் பிரேம்ராஜ் ஆகியோர் தேர்வு அதிகாரிகளாக செயல்பட்டனர்.

இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 85 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் எஸ். ஜெயசீலன் மற்றும் தேசிய மாணவர் படையினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here