சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேசும் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை என்கிறார் ஸ்டாலின்

0
68
m.k.staline

சென்னை: சட்டசபையில், தன்னை புகழ்ந்து பேசும் எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபையில், நேற்று சட்டத்துறை அமைச்சர், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய, நேரடியாக வர வேண்டும். பதில் அளித்து பேசும் போது, சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள். பதிலுரையின் போது, உங்களை ஆளாக்கிய, உருவாக்கிய முன்னோடிகளுக்கு வணக்கம் செலுத்தி பேசுவது முறை. கேள்வி நேரத்தின் போதும், சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தும் போதும், அதை பயன்படுத்தக் கூடாது.நேரத்தின் அருமையை பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கிருக்கும் அமைச்சர்களுக்கு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, இது தான் என் கட்டளை. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், இன்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ., ஐய்யப்பன், முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் பேசும் ஆளுங்கட்சி எம்எல்ஏ.,க்கள் நேரத்தின் அருமை கருதி என்னை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here