மீண்டும் பாய்ச்சலில் இந்திய பொருளாதாரம்: முதல் காலாண்டு ஜி.டி.பி., 20.1% அதிகரிப்பு

0
17
news

புது டில்லி: 2021 – 22 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் வளர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கோவிட் ஊரடங்கினால் மைனஸ் 24.4 சதவிகிதம் ஆக சரிந்திருந்தது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா கோவிட் சூழலுக்கு முன்பே மந்தமான வளர்ச்சியை கொண்டிருந்தது. 2020 மார்ச் மாதம் கோவிட் பரவத் தொடங்கியதும், முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி, சேவை என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. அவ்வாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மைனஸ் 24.4 சதவிகிதம் ஆக உள்நாட்டு உற்பத்தி சுருங்கியது. 2020 – 21 நிதியாண்டின் முடிவில் மைனஸ் 7.3 சதவிகிதமாக இருந்தது ஜி.டி.பி.,

படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்பியதால் உள்நாட்டு உற்பத்தியில் முன்னேற்றம் காணப்பட்டது. முந்தைய ஜனவரி – மார்ச் காலாண்டில் 1.6 சதவிகித ஏற்றம் கண்டது. இந்நிலையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவல் படி 2021 – 22-ன் முதல் நிதியாண்டில் ஒரே பாய்ச்சலாக 20.1 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது ஜி.டி.பி., ஏப்ரலில் 2-ம் அலை ஏற்படாமல் இருந்திருந்ததால் இந்த வளர்ச்சி இன்னும் கூடியிருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். கடந்த ஆண்டில் கடும் வீழ்ச்சி கண்ட வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், இந்தாண்டு 68.3 சதவிகிதம் வளர்ந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here