தெய்வீகத் தமிழைக் காக்க நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறியில் இந்து சங்கமம் நிகழ்ச்சி!

0
168

நாசரேத்,ஜன.27:தெய்வீகத் தமிழைக் காக்க நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறியில் இந்து சங்கமம் நிகழ்ச்சி நேற்று ஞாயிறுகிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்து முன்னணி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஆழ்வார்திருநகாp கிழக்கு ஒன்றியம் சார்பில்,நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி செல்வவிநாயகர் திருக்கோயில் மைதானத்தில் நேற்று ஞாயிறுகிழமை மாலை 5 மணிக்கு இந்து சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சுகுமார் தலைமை வகித்தார்.இந்துமுன்னணி ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் முருகன், நாசரேத் நகர பொருளாளர் சிவமாலை,பொதுச்செயலாளர் ரமேஷ் மூக்குப்பீறி வே.சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாசரேத்நகர அன்னையர்முன்னணி தலைவி பரமேஸ்வரி சண்முகலிங்கம் குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கிவைத்தார்.நா.க.தியாகராஜன் சுவாமி இறை வணக்க பாடல் பாடினார்.நாசரேத்நகர இந்து முன்னணி தலைவர் வெட்டுப்பெருமாள் வரவேற்று பேசினார்.இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பெ.ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா,மாநிலச்செயலாளர் கா.குற்றாலநாதன்,தமிழ்ப்பு லவர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி நெல்லைக் கோட்ட செயலாளர் பெ.சத்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் வெ.செ.முருகேசன்,இந்து வழக்கறிஞர் முன்னணி த.பஞ்சாப்சேகர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் தமிழ் சான்றோர்கள்,ஆன்மீகப்பெருமக்கள் மற்றும் நாசரேத் நகரம், மூக்குப்பீறி, வாழையடி, திருவள்ளுவர் காலணி, ஞான்ராஜ்நகர், ஆழ்வார்திருநகாp கிழக்குஒன்றியம் ஆகியவற்றின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண் டனர்.முடிவில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ச.சிங்காரபாண்டி,மாவட்டச் செயலாளர் சுடலைமுத்து ஆகியோர் நன்றி கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here