பேரிலோவன்பட்டியில் மக்களைத்தேடி மருத்துவ முகாம் – பங்கேற்றவர்களுக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கல்

0
23
news

தமிழக அரசு கிராமங்களிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தூத்துக்குடி அருகேயுள்ள பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேதா பிரிவு சார்பில் அங்குள்ள இந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேதா மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் தலைமை வகித்து கொரோன நோய் ஒழிப்பில் ஆயுர்வேதா மருத்துவத்தின் பங்கு மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களுக்கு அத்தி, ஆடோதோடா போன்ற மூலிகைச்செடிகள் மற்றும் நாவல் உள்ளிட்ட மூலிகை மரக்கன்றுகளை மருத்துவர் ஜான்மோசஸ் வழங்கினார்.

இதில், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here