நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர்கள் விஜயகுமார், பாபு, சுகாதாரஆய்வாளர் தியாகராஜன் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெபச்சந்திரன், முதல்வர் கோயில்ராஜ், பாஷா, முத்துசந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.