பாராலிம்பிக்; உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி வென்றார்

0
20
news

டோக்கியோ: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இன்று (செப்.,3) நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் பங்கேற்றார். அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஆவார். இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பிரவீன்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா 50 மீ., பிரிவில் வெண்கலம் வென்றார். அவர் ஏற்கனவே 10 மீ., பிரிவில் தங்கம் வென்றவர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here