சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான சட்ட மசோதா.. லோக்சபாவில் காரசார விவாதம் தொடங்கியது!

0
13
paralumantram

டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு வருகிறது. powered by Rubicon Project நேற்று காலை அதிரடி திருப்பமாக ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாகி பிரிப்பதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த இரண்டு மசோதாக்களை நேற்று மத்திய அரசு வெற்றிகரமாக ராஜ்யசபாவில் நிறைவேற்றியது.திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் அதிமுக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் நேற்று இந்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 61 வாக்குகளும் பதிவாகின. இந்த நிலையில் இன்று லோக்சபாவில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இன்று இந்த மசோதா மீதான விவாதம் நடக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மசோதா மீதான அறிமுக உரையை அமித் ஷா நிகழ்த்திய பின் அதன் மீதான விவாதம் நடைபெற்றது,

திமுக , காங்கிரஸ் கட்சிகள் லோக்சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது. காங்கிரஸ் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக பேசி வருகிறது. லோக்சபாவில் பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது. ஆகவே இன்று லோக்சபாவில் எளிதாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்படும்.ஏற்கனவே பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக லோக்சபா வர வேண்டும் என்று விப் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here