கொங்கராயகுறிச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உறுதிமொழி!

0
116
srivaikundam

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்), தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவற்றினை அமல்படுத்துவதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கருங்குளம் ஒன்றிய மா.கம்யூ சார்பில் ”குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொங்கராயகுறிச்சியில் நேற்று உறுதிமொழி ஏற்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, கருங்குளம் ஒன்றிய மா.கம்யூ. குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைத்தலைவர் ருசிஇஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருங்குளம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உறுதிமொழி வாசிக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான உறுதிமொழி” எடுத்தனர். இதில், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here