கனிமொழி வரும் 10, 11 -ல் மக்கள் குறைகளை கேட்கிறார் – கீதாஜீவன் அறிக்கை

0
9
geethajeevan

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வருகிற 10, 11 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் குறைகள் கேட்கிறார். இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான பி. கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில், ‘’ தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை தி.மு.க. துணைத் தலைவரும், மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுநாள்வரை பங்கேற்று வந்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் விடுமுறை தினமான வருகிற 10.08.2019 சனிக்கிழமை மற்றும் 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் தூத்துக்குடி வருகை தருகிறார்.

அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, மக்கள் குறைகளையும் கேட்க இருக்கிறார். அதன்படி வருகிற 10.08.2019 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சார்பில் தருவைக்குளத்தில் நடைபெறும் மகளிர் திறன்மேம்பாடு பயிற்சியை துவக்கி வைத்து அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிகிறார்.

அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு தூத்துக்குடி கால்டுவெல் காலனி சபீதா சங்கர் மஹாலில் நடைபெறும் ஜனநாயக உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு அந்தப் பகுதி மக்களின் குறைகளை கேட்க இருக்கிறார்.

11.08.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 மணிக்கு திருச்செந்தூர் ஹோட்டல் உதயம் இண்டர் நேசனலில் டாக்டர் அம்பேத்கார் அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடி மாவட்ட மாணவ மாணவியருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here