உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சிறப்பு மலர் – தூத்துக்குடியில் எம்.ஜி. ஆர் ரசிகர்கள் வெளியிட்டனர்

0
28
mgr news

எம்.ஜி.ஆர் நடித்து வெளியீடப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படமலர் தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் சிலை முன்பு அவரது ரசிகர்கள் வெளியீட்டனர்.

அ.தி.மு.க.நிறுவனர் எம்.ஜிஆர் நடித்து வெளியிடப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் நவீன முறையில் மாற்றம் செய்யப்பட்டு,டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. கடந்த 3 ந் தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இப்படம் வெளிவந்து, அரங்கு நிறைந்த காட்சியாக ஒடிவருகிறது. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின மலர் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடியில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மலர் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன் தலைமையில் அ.தி.மு.க. மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் வெளியீட்டார். முதல் பிரதிநிதியை முன்னாள் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணிமூத்த எம்.ஜி.ஆர் ரசிகர் அய்யாத்துரை ஆகியோர் பெற்றனர். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சிறப்பு மலரை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கே.மிக்கேல். மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், அய்யாத்துரை, பொ.ஜனார்த்தனம், இரா.குமாரவேல், என்.ஆர்.கிருஷ்ணன், நெப்போலியன், முருகன், நவநீதன், கோபால், மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் கல்வி குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் பொன்னம்பலம், கே.டி.சி.தொப்பை கணபதி , பாலு, சேரந்தையன், பரமசிவன்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here