ஆப்கனில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க கூடாது : தலிபான்கள்

0
14
world news

காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பங்கேற்க தடை விதிப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்துள்ள தலிபான்கள், இடைக்கால அரசை அறிவித்தனர். இதில் தற்காலிக பிரதமராக முல்லா முகமது ஹஸன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக துணை பிரதமர்களாக முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் மவுல்வி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் பயங்கரவாத அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது.

கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய ஊடக உலகத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுவதால், இதனை அனைவரும் பார்க்கக் கூடும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய அரசு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காது. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆண்கள் கிரிக்கெட் அணி போட்டிகளில் பங்கேற்கத் தலிபான்கள் தடை ஏதும் விதிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here