அறுவை சிகிச்சையின் போது நோயாளி உயிரிழப்பு – டாக்டரின் கவனக்குறைவு என முடிவு செய்திட முடியாது – நீதிமன்றம்

0
8
dr.news

புதுடில்லி-‘மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்தால், அது டாக்டரின் கவனக்குறைவால் நேர்ந்தது என, போதிய மருத்துவ ஆதாரமின்றி முடிவுக்கு வந்துவிட முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996ல், பெண் ஒருவருக்கு நடந்த சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். டாக்டரின் கவனக்குறைவால் அவர் உயிரிழந்ததாக, பெண்ணின் கணவர் என்.சி.டி.ஆர்.சி., எனப்படும், தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.இந்த விவகாரத்தை விசாரித்த ஆணையம், டாக்டரின் கவனக்குறைவால் மரணம் நிகழ்ந்ததாக கூறி, 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி டாக்டருக்கு உத்தரவிட்டது.இதை எதிர்த்து டாக்டர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, போபண்ணா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ சிகிச்சையின்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ நோயாளி உயிரிழந்தால், அதற்கு டாக்டரின் கவனக்குறைவே காரணம் என தானாக முடிவுக்கு வந்துவிட முடியாது.

டாக்டரின் கவனக்குறைவை நிரூபிக்க, ஆவணங்களோ அல்லது மருத்துவ ஆதாரங்களோஇருக்க வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டக் கூடாது. எனவே இந்த வழக்கில் தேசியநுகர்வோர் குறை தீர்ப்புஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here