ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் நடத்திய ஆட்டு ரத்தாபிஷேகம்

0
15
rajini

நடிகர் ரஜினிகாந்தி, அண்ணாத்த என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அதில் ரஜினியோடு குஷ்பு,மீனா,கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட நடிக்கைகள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடினர். அதில் ஆடு ஒன்றை வெட்டி ஆட்டுத் தலையை ரஜினி பேனரில் காண்பித்தனர். அதிலிருந்து ரத்தம் பேனரில் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆன்மிகவாதியான ரஜினியின் ரசிகர்கள், இப்படி கொடூரமாக செயல்பட்டதை பல்வேறு தரப்பினர் கண்டிக்கிறார்கள். ஏற்கனவே நடிகர்களின் கட் அவுட்க்கு பால் ஊற்றுவது போன்ற செயலை வன்மையாக கண்டித்து வரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம், இந்த சம்பவத்தையும் கண்டிக்கிறது.

மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது அந்த சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here